அய்யா ! நீங்கள் பகிர்ந்துள்ள செய்திகள் எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை தான் ஆனால் காணும் அனைவரையும் சந்தேகக்கண் கொண்டு பார்க்கும் கேவலமான பார்வையையும் உலகில் யாரையும் நம்பகூடாது என்னும் மனிதர்களை துண்டுதுண்டாக சிதைக்கும் பன்னாட்டு முதலாளித்துவ சதியும் இதனுள் இருக்கிறது இவர்கள் வைக்கும் புள்ளிவிபரங்கள் எந்த அளவிற்கு உண்மையானது என்பதை கணக்கில் கொள்ள வேண்டும் மேலும் விலங்குகளில் இருந்து மானுடகுல வளர்ச்சி என்பது அவனுடைய சமூக வாழ்வின் மூலமே சாத்தியப்பட்டது அச்சமூக வாழ்வின் ஒரு அடிப்படை அலகே குடும்பம் என்பது இதனை சிதைபதே பன்னாட்டு நிறுவனங்கள் தான் இன்று வேலை வாய்ப்புக்காக கணவன் ஒரு புறம் மனைவி ஒருபுறம் கல்விக்காக குழந்தை ஒரு புறம் என குடும்பங்களை சிதைபதே இவர்கள் தான் இதன் மூலம் குழந்தைகளுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய அன்பு அரவணைப்பு பாதுகாப்பு கிடைக்காமல் செய்வது யார் ?மேலும் அணைத்து பொருட்களையும் போல் அணைத்து வகைகளிலும் மனித உடலும் நுகர்ச்சிகானதே என்ற கேவலமான கலாச்சாரதை அன்றாடம் ஊடகங்கள் வழியாக பரப்புவது யார் என்பதையும் இணைத்து புரிந்து கொள்ள வேண்டும்
No comments:
Post a Comment