Wednesday, 31 July 2013

http://ramaniecuvellore.blogspot.in/2013/07/blog-post_4997.html#comment-form

தெலுங்கானா மக்களின் ஜனநாயக போராட்டம் வெற்றி பெற்றதே என்ற மகிழ்ச்சியில் இருக்க வேண்டிய(போலி ) கம்யூனிஸ்ட் கள் எரிய்ச்சல் அடைவது ஏன்? இந்திய தரகு பார்பனியத்தின் ஒரு சிறு கண்ணி  உடைகிறதே  என்ற வருத்தமா? தேசிய இன பிரச்சனைகளில் மார்க்சிய ஆசான்களின் வழிகாட்டுதல் என்ன என்பதை இது நாள் வரை cpi  cpm பரிசீலனை செய்தது உண்டா? மாட்டீர்கள் ஏன் என்றால் உங்களை பொறுத்த வரை(நம்பூதிரிபாட் ) இந்திய என்பது வேதங்களின் நாடு தானே !

Monday, 1 July 2013

http://jeevanathigal.blogspot.in/2013/06/blog-post_29.html?showComment=1372697736389#c7242964713188957616

//விருந்தோம்பல்,முக்கிய நிகழ்வுகள் மற்றும் வாரக்கடைசியில் ஒரு நாளே, மாதத்துக்கு இரு நாளே குடிப்பது ஒன்றும் தவறில்லை, வெக்கபட வேன்டிய அவசியமும் அல்ல.//                                                           அய்யா இப்படிதான் என் நண்பர்கள் பலர் குடிக்க ஆரம்பித்தார்கள் ஆனால் பின்னால் மாதமாய் இருந்தது வாரமானது பின் வாரமிரு முறை ஆகி பின்பு நாள்தோறும் ஆகி விட்டது இது மட்டுமல்லாமல் விபத்து உடல்ஊனம் மற்றும் நோய்கள் என நடைபிணமாகி போனார்கள் பள்ளி கல்லூரி நாட்களில் விளையாட்டு மற்றும் கலைகளில்என்னைவிட  முன்னணியில் இருந்தவர்கள் எல்லாம் இன்று இருக்கும் நிலையை பார்க்கும் போது மனது கனத்து விடுகிறது  

Sunday, 30 June 2013

http://jeevanathigal.blogspot.com/2013/06/blog-post_29.html?showComment=1372591011313#c8461839454842561083

  1. மதுவை பற்றி உங்கள் மனதில் உள்ளதை கொட்டியுள்ளீர்கள்................ உங்களை போல் அன்றாடம் மது குடியர்களை பார்த்து மன உளைச்சலுக்கு ஆளாகி வருபவர்களில் நானும் ஒருவன் ............குடிபதற்கான சமூக பொருளாதார காரணங்களை நீக்க வேலை செய்வதே இதற்க்கு ஒரே தீர்வு !
    ReplyDelete
  2. கவிதை வீதி... // சௌந்தர் //June 29, 2013 at 2:21 PM
    //பூரண மதுவிலக்கு கொண்டுவந்தா இந்த படுபாவிங்க காய்ச்சி குடிக்க ஆரம்பிச்சிடுறானுங்க...................// இன்றும் எங்கள் கோவில்களில் மது பொங்க வைத்தல் என்ற சடங்குடனே திருவிழா ஆரம்பிகின்றது அது 7 ஆம்நாள் அனைவருக்கும் பகிர்ந்து அளிக்க படுகிறதுஅது அன்றுடன் சரிஅதற்காக வருடம் பூராவும் எல்லோரும் குடித்து விட்டு அலையவில்லை ! மேலும் கள்ளசாராயம் காய்ச்சிய போது குடிபாளர்களின் எண்ணிக்கை என்ன தற்போது உள்ள நிலை என்ன ? .............அரசாங்கமே மது விற்கும் போதுமது குடிப்பவனுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் தானே

Friday, 21 June 2013

http://espradeep.blogspot.in/2013/06/blog-post_15.html

அய்யா !நீங்களே அப்படி ஒரு போக்கில்[ரஜினி வெறியராக ] இருந்து கொண்டு தமிழக மக்களை கீழ்த்தரமாக விமர்சிப்பது முரண்பாடாக உள்ளது ஒரு இலக்கிய கூட்டத்தில் கூட உங்களால் ரஜினியை தவிர வேறு நிகழ்வுகளில் கவனம் செலுத்த முடியவில்லை என்றால் இறப்பு கூட்டத்தில் மக்களின் நடவடிக்கையை எப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்கேரீர்கள் !

Thursday, 20 June 2013

http://deviyar-illam.blogspot.in/2013/06/blog-post_20.html?showComment=1371785050864#c6575476601432967893

//பெரியார் தனது 94 வயது வரைக்கும் சோர்வில்லாது தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்று "கடவுள் இல்லை. கடவுளை நம்பாதே " என்றார். 

ஆனால் டிஎம்எஸ் ஒரு சின்ன ஒலிப்பதிவு கூடத்தில் இருந்து கொண்டு அவர் பாடிய பக்தி பாடல்களின் மூலம் சாமி கும்பிட விருப்பமில்லாதவர்களையும் கோவில் நோக்கி ஓட வைத்தார்.//          அய்யா ! ஒரு தத்துவத்தை உருவாக்கி அதற்காக அமைப்பை கட்டி வேலை செய்து வெற்றியும் பெற்றவர் பெரியார்! கடவுள் மறுப்பு என்பது அதன் ஒரு பகுதியே அப்படிப்பட்ட ஒரு தலைவரை  ஒரு துறை சார்ந்த கலைங்கரோடு ஒப்பிடுவது எவ்வாறு சரியாகும் இது தான் தமிழர்களின் பலகீனம் ஆகும் 

Thursday, 28 March 2013

http://puduvairamji.blogspot.in/2013/03/blog-post_27.html

//பொதுவுடைமை கொள்கை திசை எட்டும் சேர்ப்போம் //என்று முழக்கம் வைத்து கொண்டு மார்க்சியதிர்ற்கு எதிரான நிலை ஏன் ?  தரகு முதலாளிய பார்பனிய ஒடுக்குமுறை கட்டமைபே இந்தியா....... இந்த அமைப்பு பல்வேறு தேசிய இனங்களை ஒடுக்கி அவைகளின் விடுதலைமறுத்தே பிழைத்து வருகிறது................. தேசம் பற்றிய மார்க்சிய வரையறை என்ன ?அதன் அடிபடையில் இந்தியா என்பது என்ன ? இதை எல்லாம் தெளிந்து விட்டு  ஒடுக்கும் இந்தியாவின் வெளியுறவு கொள்கை பற்றி கவலை படுங்கள் 

Sunday, 24 March 2013

facebook

மாணவர்களே! நீங்கள் வைத்திருக்கும் சரியான முழக்கங்களை அங்கீகரிபவர்களை மட்டுமே அணுகுங்கள்  இந்திய தேசியம் பேசும் எவரையும் நம்ப வேண்டாம்.................. சி பி ஐ ,சி பி எம் ,ம .க இ க போன்ற கட்சிகள்.................. விடுதலை புலிகள் போராடும் பொது பாசிஸ்டுகள் என்றும் ஒன்று பட்ட இலங்கைக்குள் தீர்வு............. குழந்தை போராளிகள்..................... இலங்கையில் நான்கு தேசிய இனங்கள் உள்ளன ..................என்று பலவிதமான பொய்களையும் அவதூறுகளையும் அள்ளி வீசி ஈழ போராட்டத்தை கொச்சை படுத்தின மேலும் சி பி எம் மாநாடுகளில் ராஜபக்சே கட்சிக்கு சிறப்பு அழைப்பும் அதில் அவர்கள் கலந்துதும் கொண்டார்கள் ஆகவே இந்த துரோகிகளிடம் கவனமாக இருங்கள் உங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் அமைப்புகளிடம் உங்கள் கோரிக்கை களையும் முழக்கங்களையும் முழுமையாக ஆதரிகிரார்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்................ஏன் என்றால் aiyf -aisf முதலிய அமைப்புகளின் சுவரொட்டிகளில் உங்கள் கோரிக்கைகளுக்கு எதிரான முழக்கங்களுடன் இருப்பதை கவனியுங்கள் ஆனால் அவர்களும் உங்களுடன் கலந்து இருக்கிறார்கள் ஆகவே கவனம் தேவை ஏன் என்றால் விடுதலை புலிகள் வீழ்த்த பட்டது எதிரிகளால் அல்ல துரோகிகளால்.

Thursday, 17 January 2013

http://kathirvalaipoo.blogspot.in/2013/01/blog-post_17.html#comment-form

அய்யா ! நீங்கள் பகிர்ந்துள்ள செய்திகள் எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை தான் ஆனால் காணும் அனைவரையும் சந்தேகக்கண் கொண்டு பார்க்கும் கேவலமான பார்வையையும் உலகில் யாரையும் நம்பகூடாது என்னும்  மனிதர்களை துண்டுதுண்டாக சிதைக்கும் பன்னாட்டு முதலாளித்துவ சதியும் இதனுள் இருக்கிறது  இவர்கள் வைக்கும் புள்ளிவிபரங்கள் எந்த அளவிற்கு உண்மையானது என்பதை கணக்கில் கொள்ள வேண்டும் மேலும் விலங்குகளில் இருந்து மானுடகுல வளர்ச்சி என்பது அவனுடைய சமூக வாழ்வின் மூலமே சாத்தியப்பட்டது அச்சமூக வாழ்வின் ஒரு அடிப்படை அலகே குடும்பம் என்பது இதனை சிதைபதே பன்னாட்டு நிறுவனங்கள் தான் இன்று வேலை வாய்ப்புக்காக கணவன் ஒரு புறம் மனைவி ஒருபுறம் கல்விக்காக குழந்தை ஒரு புறம் என குடும்பங்களை சிதைபதே இவர்கள் தான் இதன் மூலம் குழந்தைகளுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய அன்பு அரவணைப்பு பாதுகாப்பு கிடைக்காமல் செய்வது யார் ?மேலும் அணைத்து பொருட்களையும் போல் அணைத்து  வகைகளிலும் மனித உடலும் நுகர்ச்சிகானதே என்ற கேவலமான கலாச்சாரதை அன்றாடம் ஊடகங்கள் வழியாக பரப்புவது யார் என்பதையும் இணைத்து புரிந்து கொள்ள வேண்டும் 

Monday, 7 January 2013

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=22536

அம்மா!இன்றுள்ள சூழலில் மக்கள் போராட வருவதே பெரிய விசயம் அப்படி போராட வருபவர்களை கொச்சை படுத்துவது சரியானது அல்ல அருந்ததி ராய் அவர்கள் என்ன கருத்து சொன்னார் என்று நீங்கள் குறிப்பிட வில்லை மேலும் அருந்ததி ராய் COMMUNISTUM  அல்ல அவர் ஒரு சமூக ஆர்வலராக கருத்துகளை தெரிவிக்கிறார் பெரும்பான்மை அடிப்படை மக்களின் துன்பங்களை பார்த்து வரும் அவருக்கு இது பெரிதாக தெரிய வில்லை போலும்.................. மேலும் அரசும் இப்படி பட்ட அமைபாக்க படாத போரட்டங்களை தான் விரும்புகிறது இது போன்ற போரட்டங்களை எளிதில் நீர்த்து போக செய்ய அரசால் முடியும் ஆகவே சமூக மாற்றங்களை விரும்பும் அமைப்புகள் இது போன்ற போரட்டங்களை புறகனிகாமல் இவற்றுக்கு ஆதரவளிக்கவும் வழிநடத்தவும் கற்றுக்கொள்ள வேண்டும் .................................. பின்னூட்டங்களில் கருத்து தெரிவிபவர்கள் வியாசன் போன்ற நபர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் இவர்கள் மைய பிரச்சனைகளில் இருந்து மடை மாற்றி விடுவதே இவர்களின் பணியாகும்