Thursday, 22 November 2012

http://nkshajamydeen.blogspot.com/2012/11/blog-post_22.html

இஸ்ரேல் மிக தெளிவாகவே வேகமாக மற்றும் அதிரடியாக மேலும் அதிக பட்ச ஆயுதங்களை கொண்டு அதிகபட்ச உயிர்களையும்  உடமைகளயும் அழிக்கிறது  நாம்  என்ன நடக்கிறது என்று யோசிபதற்குள் இனபடுகொலையை நடத்தி விட்டு போர் நிறுத்தமும் செய்துவிடுகிறது  இதனை அது பாலஸ்தீனர்களைமுந்திய தாக்குதல் லுக்கு பின் என்ன முன்னேற்றம் அடைந்தார்களோ அதனை முழுமையாக அழித்து விடுகிறது  எந்த நிலையில் இருந்தார்களோ  ஒரு அடி கூட முன்னேற விடாமல்   செய்கிறது இந்த அநியாயத்தை கேட்க யாரும் இல்லையா என்று புலம்பத்தான் முடிகிறது 

Wednesday, 21 November 2012

http://oosssai.blogspot.com/2012/11/blog-post_21.html

அய்யா !தங்களின் இந்தபதிவையும் பார்த்தேன் அண்ணாவைபற்றியான மீள் பதிவையும் பார்த்தேன்அண்ணாவை பற்றி மாற்று கருத்து வைத்து கொண்டு  உங்களுடைய இணையத்தின் தலைப்பில் அண்ணாவின் பொன்மொழி ஏன் இத்தனை முரண்பாடுகள் யாரைஏமாற்ற இத்தனை வேஷங்கள் முகமுடியை கழற்றுங்கள் நீங்கள் நிற்கும் கொள்கைக்காக நேர்மையாய் நின்று வேலை செய்யுங்கள் பாம்புக்கு தலையையும் மீனுக்கு வலையும்  காட்டி ஏமாற்றாதீர்கள் ......................நன்றி 

Tuesday, 20 November 2012

http://www.nisaptham.com/2012/11/blog-post_20.html

அய்யா !பழமலை என்று இல்லை இன்று தமிழகத்தில் உள்ள முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் என்று கருத படுவோர் யாரும் இச்சம்பவத்தை பற்றி ஆய்வும் செய்யவில்லை கண்டனமும் தெரிவிக்க வில்லை மேலும் கருத்து தெரிவிபவர்களும் எதாவது ஒரு இடத்தில பறையர் சமூகத்தை பற்றி ஒரு சாடலாவது சாடி விட்டுத்தான் போகிறார்கள் இதுபூனைக்கும் தோழன் பாலுக்கும் காவல் என்பதை போல் இருக்கிறது தமிழ் சினிமா நூற்றுக்கு தொண்ணுறு சதமானம் காதலை போற்றி படம் எடுகிறார்கள் அந்த புரட்சி இயக்குனர்கள் எங்கே போய் ஒளிந்து கொண்டார்கள் முதலில் அந்த மக்கள் மத்தியில் இந்த சமூகத்தை பற்றி நம்பிக்கை உருவாக்க பட வேண்டும் 

http://mydeartamilnadu.blogspot.in/2012/11/blog-post_20.html

அய்யா! பால்தாக்ரேவின் உணர்வு சரியானது தான் ஆனால் அவர்கொண்ட வழிமுறை தான் தவறானது மண்ணின் மைந்தர்களான மராத்தியர்களுக்கு அனைத்திலும் முன்னுரிமை வேண்டும் என்பது சரி ஆனால் அதற்கு தீர்வாக உழைக்கும் மக்களான தமிழர்களையும் பீகாரி களையும் எதிரியாக காண்பித்து குஜராத்தி பனியாகளுடன் கூடிக்குலவி இந்துபார்பநியதை தன வழிமுறையாக கொண்டார் இதன் மூலம் உழைக்கும் இஸ்லாமியர்களையும் எதிரியாக பாவித்தார் ஆனால் தன் பிழைப்ப்பு வாதத்திற்காகமுஸ்லிம்  உயர் வர்க்க பிரிவினருடன் உறவு வைத்திருந்தார் இப்படி ஒருஇந்திய  தரகு முதலாளிய பார்பனிய அடியாளுக்கு இந்திய ராணுவ மரியாதையும்இந்திய  தேசிய கொடி போர்துதலும் பொருத்தமானதே  

http://www.kodangi.com/2012/11/non-vegetarians-cheat-lie-steal-fight-commit-sex-crimes-says-textbook-students-india.html#.UKuGU-STyCk

அய்யா !மலைகளில்காய் கனி கிழங்குகளை உண்டு  வாழ்ந்திருந்த மனித இனம் சமவெளி பிரதேசங்களுக்கு வந்த பிறகு அவ் உணவு பற்றாகுறையால் அசைவ உணவை கைக்கொண்டது அதனால் வேட்டை ஆடும் சமூகமாக மாறியது  மேலும் மனிதன் மற்ற வேட்டை ஆடும் மிருகங்களை போல் இயல்பான வேட்டைக்காரன் அல்ல ஆகவே அவன் கூட்டமாக  சென்று தான்வேட்டை ஆட வேண்டும் இதுவே அவனுடைய சமூகஉணர்வை , உறவை மேலும் வளர்த்தது அதிகமான கொழுப்பு மற்றும் புரத சத்து உள்ள மாமிசம் அவனுடைய மூளை வளர்ச்சியிலும் உடல் வளர்ச்சியிலும் பல்வேறுமுன்னேற்றங்களை  மாற்றங்களை ஏற்படுத்தின (எடை ஒப்பிட்டளவில் மனிதனுடைய மூளை எடை மற்ற விலங்குகளை விட கூடுதல் அதே போல் மனிதனின் குடலின் நீள அளவும் கூடுதல்) அசைவ உணவு எளிதில் ஜீரணம் ஆகாததால் உணவு தேடும் நேரம் மிச்சமானது இது அவன் சிந்திபதற்கும் தன் வேட்டை திறனை மேம்படுத்தவும் பயன்படுத்தினான் பிறகு கருவிகள் தொடங்கி .......................................இன்றுள்ள நிலை வரை வளர்வதற்கு அசைவ உணவினால் ஏற்பட்ட மூளை மற்றும் உடல் வளர்ச்சியே காரணம் அய்யா .சைவ உணவு என்பதை மனிதன் நிலை அமர்ந்த சமூகமாக குறிப்பாக வாணிக சமூகமாக ஆன  பிறகே கைகொண்டான் அவனுக்கு உழைப்பில் இருந்தும் பசியில் இருந்தும் விடுபட்டதால் அவன் உடல் மாமிச உணவை ஏற்று கொள்ளவில்லை( இன்றும் நம்மில் பலறந்த சூழ்நிலையில் தான் இருக்கிறோம் )ஆகவே தான் சமணமும் ,பௌத்தமும் வாணிக குலத்தால் வளர்க்க பட்டது சிந்தனை மற்றும் தத்துவ அளவில் உயர்த்த நிலையில் இருந்த இவ்விரு மார்கங்களுடன் மோத முடியாத பார்ப்பனீயம் அழித்தது முடியாத  போது உள்வாங்கி செறித்து கொண்டது தன் மேட்டிமை தனத்தை காப்பற்றி கொள்ள சைவத்தை தன்னுடைய தாக பிரகடன படுத்தி கொண்டது ................................சரி பார்பனியம் புனித விலங்காக போற்றும்  பசு சைவமா அசைவமா? பகிருங்கள் ! 

http://www.rahimgazzali.com/2012/11/children-18.html?showComment=1353417937705#c1761489788237963818

அய்யா ! நூறு ரூபாய்க்கு குழந்தையை விற்கும் அளவிற்கு கொடுமையான வறுமை நிலவுகிறது அதை கண்டித்து ஒரு வார்த்தை கூட எழுத வில்லை?..................... அப்படி என்றால் கள்ளகாதல் அல்லாமல் முறையான உறவு மூலம்  பிறந்திருந்தால் நீங்கள் இச்செயலை ஆதரிபீர்களா ?

http://arulgreen.blogspot.com/2012/11/Dharmapuri-violence-myths-facts.html

அய்யா ! // வன்னியர்களுக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் சுரண்டப்படுகிற சாதிகளின் பட்டியலில்தான் இருக்கிறார்கள். சுரண்டும் சாதிகளாக இல்லை//..................உண்மை ஆனால் பிற்படுத்த பட்டவனுக்கு பொருளாதார ஒடுக்குமுறையும் அதை செய்கின்ற தேசிய ஒடுக்குமுறையும் மட்டும் தான் ஆனால் தாள்தபட்டவனுக்கோ  சாதிய தீண்டாமை கொடுமையும் கூட சேர்கிறது அதனால் தான் தன்  மகள் ஒரு பறையனுடன் திருமணம் செய்வதை தன உயிரை கொடுத்தேனும் தடுக்க வேண்டும் என்று கருதுகிறான் இதே சமயத்தில் ஒரு முதலியருடனோ ,செட்டியாருடனோ காதல்என்றால் இந்த அளவிற்கு எதிர்ப்பது இல்லை காதும் காதும் வைத்தாற்போல் முடித்து.
விடுகிறார்கள் ஆகவே வன்னியர்கள் மற்றும் தாழ்த்த பட்டவர்கள் மீதான ஒடுக்குமுறை என்பது ஒரே தளத்திலானது அல்ல ...........//தருமபுரி கலவரம் தொடர்பான செய்திகளில் பலர் "வன்னிய ஆதிக்க சாதி" என்கிற வார்த்தையை வேண்டுமென்றே பயன்படுத்துகின்றனர். ஆதிக்கம் என்றால் "பிறரைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலை; அதிகாரம் மேலோங்கிய நிலை" என்கிறதுக்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி.//...............................அய்யா இதற்க்கு நீங்கள் அகராதி எல்லாம் தேடி போக வேண்டாம் களத்திலேயே உண்மை வெட்டவெளிச்சமாய் இருக்கிறது ..........நம் தமிழ்தேசத்தை அடிமை படுத்தி சுரண்டுவது இந்திய தரகு முதலாளிகள்..........அவர்களின் நடைமுறை தத்துவமே பார்பனியம் இந்த தத்துவத்தை கொண்டு இந்த மக்களை பிரித்து ஆள்கிறது பார்ப்பனீயம் இந்த தரகு முதலாளிய பார்பனிய சுரண்டலுக்கு அடியாள் வேலை பார்ப்பது நீயா நானா என்று போட்டி இடுவது தான் இங்குள்ள ஒட்டு பொறுக்கி அரசியல் கட்சிகள் இதில் தங்களது சாதிய சமூக நீதிக்காக களத்திற்கு வந்த அமைப்புகளும் கட்சி ஆரம்பித்து அதே இந்திய தரகு பார்ப்பனியத்திற்கு அடியாள்வேலை  செய்ய போட்டிபோடுகின்றன ஆகவே இங்கு ஆதிக்க சாதி என்பது தன்னை யாருடன் அடையாள படுத்தி கொள்கிறோம் என்பதை பொறுத்ததே அதாவது ஒட்டு மொத்த உழைக்கும் மக்களின் விடுதலைக்காகவா அல்லது ஆளும் வர்க்க நலன்களுகாக்வா எதற்காக நிற்கிறோம் என்பதை பொறுத்ததே ஆதிக்க சாதியா அல்லது ஆதிக்கத்தை எதிர்க்கும் சாதியா என்பது ...........................................................................// தருமபுரிக் கலவரம் தொடர்பான வன்னியர்கள் மீதானக் குற்றச்சாட்டுகளில் இரண்டு நிலைகள் உள்ளன. ஒன்று தாழ்த்தப்பட்ட மக்கள் குற்றம் சாட்டுவது. இதற்கு ஒரு தார்மீக வலிமை இருக்கிறது. அவர்களின் கோபத்தில் நியாயம் இருக்கிறது.////

//ஆனால், உண்மையான ஆதிக்க கூட்டத்தினர் - அதாவது அரசியல் அதிகாரம், நீதித்துறை, பத்திரிகை, அரசு நிருவாகம், பொருளாதார வலிமை என எல்லாவற்றிலும் தமது மக்கள்தொகை விழுக்காட்டை விட மிகக் கூடுதலாக அபகரித்துள்ள சிறுபான்மை சாதிக் கூட்டத்தினர் - தருமபுரி கலவரத்தைக் காரணம காட்டி வன்னியர்களுக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் இடையே கசப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் பிரச்சாரம் செய்கின்றனர்//.....................................உண்மைதான் இப்போது தான் நீங்கள் உங்களை சுயவிமர்சனம் செய்து கொண்டு நீங்கள் யார்பக்கம் தாழ்த்தப்பட்ட மக்கள் பக்கமா அல்லது நீங்கள் குறிபிட்டுள்ள அதிகார வர்கத்தின் பக்கமா எனஉங்கள் நடவடிக்கை மூலம்  தெளிவு படுத்துங்கள் ..................................//குறிப்பாக "கட்டாயக் காதல் - கலப்பு - நாடகத் திருமணங்கள்" நடத்தப்படுவதாக, தமிழ்நாட்டில் பல சமூகத்தவரிடையே மனக்கசப்பு உருவாகியுள்ளது. இதுவே, பல இடங்களில் சமுதாய மோதல்களுக்கு வழிவகுக்கிறது. காதல் திருமணங்கள் தவறு என்று கூற முடியாது. ஆனால், சாதி ஒழிப்பு என்பதை ஒரு நோக்கமாக வைத்து கட்டாய காதல் திருமணங்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்படுமானால் - அவையும் மனித உரிமைகளுக்கு எதிரான நிகழ்வுகளே ஆகும் (இது குறித்து பின்னர் விரிவாக பார்ப்போம்).//..................... விரைவாக எதிர்பார்கிறேன்