Thursday, 15 November 2012

http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.in/2012/10/blog-post_5.html#comment-form


//உங்கள் மகளை நீங்கள் ஒரு பிச்சைக்காரனுக்கு மணம் முடித்து வைத்துள்ளீர்களா? வைப்பீர்களா? 

உங்கள் மகனுக்கு பிச்சைக்கார பெண்ணை மணம் முடித்து வைத்துள்ளீர்களா? வைப்பீர்களா?

நீங்கள் உண்ணும் தட்டில் பிச்சைக்காரனுக்கு உணவளித்துள்ளீர்களா ? உணவளிப்பீர்களா?

பிச்சைக்காரன் உண்ட தட்டில் நீங்கள் உணவு உண்டுள்ளீர்களா? உண்பீர்களா?//
பிச்சைக்காரன் பணக்காரன் ஆகி விட்டால் மேற்கண்ட எல்லாம் நடக்கும் ! .....ஆனால் கீழ்சாதிக்காரன் பணக்காரன் ஆனாலும் மேற்கண்ட எதுவும் நடக்காது ! பார்பனர்கள் நண்மைக்காக இந்தியா என்று ஒரு நாடு எவ்வாறு இட்டுகட்டி உருவாக்க பட்டதோ....... அது போலவே பார்பனியத்தின் வாள்வதரதிற்காக இந்து மதமும் உருவாக்க பட்டதே........ பூர்வ குடி மக்களின் ஒடுக்கு முறையில் தான் இன்று இருக்கும் இந்தியாவும் இந்து மதமும் உயிர் வாழ்கின்றன ! உங்களுக்கு பிரம்மதேயங்களியும் வடபதிமங்கலங்களியும் தெரியுமா தெரியாவிட்டால் வரலாற்றை தெரிந்து கொண்டு இந்த பிரச்சனைகளை பற்றி பதிவு எழுத வரவும் ! நீங்கள் ஈழதமிழர் என்றே நினைகிறேன் நீங்கள் எல்லாம் செத்தபோது இந்து என்ற முறையில் உங்களுக்கு யார் உங்களுக்கு ஆதரவு தெரிவித்தார்கள்! இன்று வரை இந்தியாவில் உள்ள நீங்கள் இந்து என்று கருதும் ஒரு பார்பான் கூட ஆதரவு தெரிவிக்க வில்லை என்பதை அறிவீர்களா?..... உங்களுக்காக தமிழ்நாட்டில் போராடி தீ குளித்து உயிர் நீத்த எல்லோரும் {ஒரு இஸ்லாமியன் உட்பட } தமிழன் என்ற உணர்வில் தானே அன்றி இந்து என்ற உணர்வில் அல்ல நீங்கள் இந்து என்று கருதுபவர்கள் இந்தியா முழுவதும் தான் இருந்தார்கள் இருக்கிறார்கள்..... அவர்களிடம் ஈழ தமிழன் என்று சொன்னால் தீவிரவாதி என்று சொல்லி விரட்டி அடிப்பான் அல்லது காவல்துறையிடம் ஒப்படைப்பான். தமிழ்நாட்டில் மட்டும் தான் அதுவும் தமிழன் என்ற முறையில் தான் எங்கள்ஆதரவு.................... நீங்கள் இந்து என்றோ கிறிஸ்துவன் என்றோ இஸ்லாமியன் என்றோ அல்ல என்பதை தெளிவாக புரிந்து நடந்து கொள்ளுங்கள் இங்குள்ள பார்பனிய ஒடுக்கு முறை 1 சாதிய ஒடுக்குமுறை 2 தேசிய ஒடுக்குமுறை என்ற முறைகளில் ஒடுக்கி வருகிறது இதை எதிர்த்து நாங்கள் போராடி வருகிறோம் நம் இனம் இவ்வாறு தலைமை இல்லாமல் வீழ்ச்சியுற்று இர்ருக்கும் வேளையில் அதன் விடியலுக்காக வேலை செய்யுங்கள் இஸ்லாமியநிடமும் மற்றவரகொளுடும் சும்மா வெட்டி சண்டை எதற்கு? அதை செய்வதற்கு உண்டுகொழுத்த பார்ப்பான் நிறைய பேர் இருக்கிறர்கள்
ReplyDelete
    1. வாங்க karutha :),
      //பிச்சைக்காரன் பணக்காரன் ஆகி விட்டால் மேற்கண்ட எல்லாம் நடக்கும் ! .....ஆனால் கீழ்சாதிக்காரன் பணக்காரன் ஆனாலும் மேற்கண்ட எதுவும் நடக்காது//

      இது ஒரு தவறான புரிதல். தாழ்த்தப்பட்டவருக்கும் உயர்த்தப்பட்டவருக்கும் இடையே பல திருமணங்கள் நடந்துள்ளன, நடக்கின்றது, நடக்கும்.
      அம்பேத்கர் மணந்தது ஒரு பிராமணப்பெண்ணை. இது எப்படி சாத்தியமானது. அவர் கல்வி கற்றதனால். நல்ல கல்வி, பணத்தையும். பெயரையும் , புகழையும் பெற்றுத்தரும். 

      பிரமாணர்கள் வரலாற்றில் செய்ததை நான் சரி என்று வாதிடவில்லை. தீண்டாமைக்கு எதிரான போராட்டம் காலத்திற்கு தகுந்தார் போல் மாற வேண்டும். தீண்டாமைக்கு இன்றும் ஒட்டு மொத்த பிராமணர்களையும் குற்றம் சொல்வது முட்டாள் தனமாகும். எப்படி ஒரு இசுலாமியன் தீவிரவாத வேளைகளில் ஈடுபடும்பொழுது ஒட்டுமொத்த இசுலாமியர்களும் தீவிரவாதிகள் என்று கூறுவது தவறோ அவ்வாறே அன்று சில பிராமணர்கள் செய்த தவறுக்காக இன்று ஒட்டுமொத்த பிராமணர்களையும் குறை சொல்வது தவறாகும். இதை கொஞ்சம் ஆழமாக சிந்தித்து பாருங்கள்.

      ஈழப்பிரச்சனைக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் தமிழர்கள்தான். அவர்களுக்கு மதம் சாயம் பூசுவது தவறாகும். ஆனால் என்ன ஒரு வேதனையான விடயம் எனில்....சரி விடுங்க. ஈழத்திற்கு இசுலாமியர்கள் ஆதரவு எந்த அளவிற்கு என்பது ஈழத்தமிழர்களுக்கும் இசுலாமியர்களுக்குமே நன்கு தெரியும். 

      //இங்குள்ள பார்பனிய ஒடுக்கு முறை 1 சாதிய ஒடுக்குமுறை 2 தேசிய ஒடுக்குமுறை என்ற முறைகளில் ஒடுக்கி வருகிறது இதை எதிர்த்து நாங்கள் போராடி வருகிறோம் நம் இனம் இவ்வாறு தலைமை இல்லாமல் வீழ்ச்சியுற்று இர்ருக்கும் வேளையில் அதன் விடியலுக்காக வேலை செய்யுங்கள்//

      நிச்சயமாக. எந்தவித ஒடுக்குமுறையையும் கண்டிப்பாக எதிர்த்தே ஆக வேண்டும். இதுபற்றி விரிவாக பிறகு அலசுவோம்.

      //இஸ்லாமியநிடமும் மற்றவரகொளுடும் சும்மா வெட்டி சண்டை எதற்கு? //
      இந்தியா அன்றைய பார்ப்பனர்களால் சீரழிக்கப்பட்டது உண்மையானால் நாளைய இந்தியா சவூதி அராபியாவாலும் வாடிகனாலும் அடிமையாக்க்ப்படலாம். இதை எந்த விதத்திலும் ஏற்க்க இயலாது. இந்து மதம் அடிமைத்தனத்திற்கு விட்டது என்றால் நாளை இசுலாமும், கிருத்துவமும் அடிமைத்தனத்திற்கு வித்திடாது என்பதை உங்களால் கூற இயலுமா? எனவே தான் சொல்கிறேன் அனைத்து மதங்களும் மனிதர்களை அடிமையாக்காமல் காலத்திற்கு ஏற்றார்போல தம்மை சீர்திருத்த்க்கொள்ள வேண்டும். 

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)
  1. நண்பர் புரட்சிமணி, 
    karutha என்ற பெயரில் வந்த அரபிய ஆக்கிரப்பு மூளை கழுவதினால் ஏற்பட்ட வாந்தியை அகற்றி உங்கள் இணைய தளத்தை சுத்த படுத்துங்கள். 

    நான்வழக்ககமாக எனக்கு பிடித்த தமிழ் பதிவுகளை எனக்கு தெரிந்த வட்டத்துக்கு அனுப்புவேன். இப்போ உங்க பதிவை அனுப்பிய போது ஆமோக வரவேற்பு. ஆனா அவங்களுக்கு பதில் எழுதும் பழக்கமில்ல.ஒரு போதும் இணைய தளங்களில் கருத்து தெரிவித்ததுமில்ல.ஒரு வரி உங்க கருத்தை ஆதரவு தெரிவியுங்க என்றால் ஏதோ மிக பெரிகடினமான காரியம் மாதிரி கோகிளில் தமிழ் அடிப்பது கடினம் என்பார்கள். உங்க கருத்தின் நியாயத்தை ஏற்று கொண்ட பலர் எனக்கு தெரிந்தே பலர் இருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். உங்க கருத்தின் நியாயத்தை ஏற்று கொண்ட இணைய தளங்களில் எழுதுபவர்கள் சிலர் கூடஇங்கே ஏதாவது உண்மையை சொல்ல போய் தங்களது முற்போக்கு இமேச்சுக்கு டமேச் வந்திடுமோ என்று பயந்திருப்பார்கள்
    Reply
    Replies
    1. நண்பா வேகநரி,
      //நண்பர் புரட்சிமணி, 
      karutha என்ற பெயரில் வந்த அரபிய ஆக்கிரப்பு மூளை கழுவதினால் ஏற்பட்ட வாந்தியை அகற்றி உங்கள் இணைய தளத்தை சுத்த படுத்துங்கள். 
      //
      அவரின் கருத்து தவறான கருத்தாக இருந்தால், அவரின் கருத்தாக்கம் தவறு என்று நாம்தான் புரிய வைக்க வேண்டும்.
      நாம் முடிந்த வரை முயலுவோம். நான் அவருக்கு அளித்த பதில் ஏற்ப்புடையது அல்ல என்று நீங்கள் நினைத்தால், உங்களின் கருத்தை அவர் ஏற்கும் படி கூறுங்கள். அவர் ஏற்கலாம், அல்லது அவரைப்போன்ற கருத்தாக்கம் உடையவர்கள் தங்களது கருத்தை மாற்றிக்கொள்ளலாம். நான் சொல்வது சரிதானே நண்பா...

      என்னுடைய கருத்து உங்களால் ஏற்கப்பட்ட பொழுது அது நம்முடைய கருத்து...நம்முடைய கருத்து பிறாரால் ஏற்க்கும்போழுது அது பெரும்பாலான் மக்களின் கருத்து. ஏதோ ஒரு காரணத்தினால் அவர்கள் வெளிப்படையாக கூறாமல் இருக்கலாம், புரிதல் மனதளவில் இருந்தாலே முதலில் போதுமானது. 

      இந்த பதிவை பிறரிடம் பகிர்ந்து கொண்டமைக்கும் தங்களது கருத்தை தொடர்ந்து கூறுவதற்கும் மிக்க நன்றி நண்பா...நாம் தொடர்ந்து மனிதத்திற்காக பயணிப்போம் :)
  2. அருமையான கருத்துக்கள் நண்பரே. பார்ப்பன எதிர்ப்பு என்ற காலியாகிப்போன சட்டியை வைத்து பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்களின் ஏச்சுக்களை புறந்தள்ளுங்கள்.
    Reply
    Replies
    1. வாங்க M.Mani :),
      தவறான கருத்து எங்கிருந்தாலும் எதிர்க்க வேண்டும். அது காலத்திற்கு ஏற்றார் போல இருக்க வேண்டும்.
      இரட்டை குவளை முறைக்கு பார்ப்பனர்களை குறை சொல்வது அறிவுடமையாகாது. அதே நேரத்தில் கோயிலில் பிராமணர்கள் மட்டுமே பூசாரி என்பதும் ஏற்க்க இயலாது. விருப்பம் உடைய பிற ஜாதியினருக்கும் தகுதி ஏற்ப்படுத்தி வாய்ப்பளிக்க வேண்டும். வட மொழியில் தான் மந்திரம் தமிழில் அல்ல என்பதையும் ஏற்க்க இயலாது. 
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)
  3. மணி லைட்டா சறிக்கி இருக்கீங்க . என்ன சொல்ல வறீங்க என்பது தெளிவாக புரிந்தாலும் . சொன்ன விதத்தில்தான் கொஞ்சம் தப்பு . மற்றபடி நிறைய யோசிங்க சிந்தியுங்கள் ............................ஆனால் எந்த மைத்தாலாஜி . மண்ணாங்கட்டி என்று முன்னேருதி இல்லாமல் சிந்தியுங்கள் ..........
    Reply
    Replies
    1. வாங்க செல்வின் :),

      //மணி லைட்டா சறிக்கி இருக்கீங்க . என்ன சொல்ல வறீங்க என்பது தெளிவாக புரிந்தாலும் . சொன்ன விதத்தில்தான் கொஞ்சம் தப்பு . //
      உண்மைதான். தீண்டாமை என்பது ஒரு மிகப்பெரிய கொடுமை. அதை ஒரு பதிவில் கூற நினைத்தாலும் கொஞ்சம் சறுக்கி யுள்ளேன் என்பதை மறுப்பதற்கில்லை. உண்மையில் நான் இதை முதல் முறை எழுதியபொழுது பல உண்மைகளை பச்சையாக எழுதி இருந்தேன். அது பலரது மனதை புண்படுத்தும் என்று எண்ணி பலவற்றை நீக்கி, கொஞ்ச சேர்த்து இப்படி வந்துவிட்டது. 

      //மற்றபடி நிறைய யோசிங்க சிந்தியுங்கள் ............................ஆனால் எந்த மைத்தாலாஜி . மண்ணாங்கட்டி என்று முன்னேருதி இல்லாமல் சிந்தியுங்கள் ..........//

      நிச்சயமாக நண்பா. பழையவற்றை தொட்டால் ஏதோ இந்து மதத்தை ஆதரிப்பது போன்ற தோற்றம் வந்துவிடுகிறது. உண்மையில் மதத்தை கடந்து செயல்படவே நான் விரும்புகிறேன்.(நீங்களும் அவ்வாறு இருப்பதில் மகிழ்ச்சி. )அதே நேரத்தில் ஒரு மதத்தின் பெயரால் ஒட்டுமொத்த மக்களையும் குற்றம் சொல்வது எனக்கு ஏற்ப்புடையத்தல்ல. இது அனைத்து மதத்திற்கும் அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும்.

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)
  4. மனிதர்கள் அடிப்படையில் சமமானவர்கள் என்பது ஒரு நியாயமான கோட்பாடு. ஆனால், நடைமுறையில் சமமான இரண்டு நபர்கள் உலகில் இல்லை. ஒவ்வொருவரும் எதோ ஒரு விடயத்தில் மற்றவரைக் காட்டிலும் உயர்ந்தோ தாழ்ந்தோ இருக்கிறார்கள்.

    இந்த இடத்தில் இயற்கையான குறைபாடு, செயற்கையான குறைபாடு என ஏற்றத்தாழ்வுக்கான காரணங்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். 

    ஒருவருக்கு காது கேட்கவில்லை, அல்லது கண்பார்வை இல்லை என்பது இயற்கையான குறைபாடு. இதனை மாற்ற முடியாது.

    ஆனால், செயற்கையான குறைபாடுகள் இதிலிருந்து மாறுபடுகின்றன. பணம், பதவி, படிப்பு எல்லாம் செயற்கைதான். செயற்கையான குறைபாடுகளில் மிகக் கொடுமையானது தீண்டாமைதான்.

    ஏனெனில், மற்ற எல்லா குறைபாடுகளையும் ஒருவன் தனது சொந்த முயற்சியால் மாற்ற முடியும். எடுத்துக்காட்டாக, படித்தவனைவிட படிக்காதவன் தாழ்ந்தவன்தான். இந்தக் குறைபாடு கல்வியால் மாற்றப்படக்கூடியது. பணக்காரனைவிட ஏழை வசதியில் தாழ்ந்தவன்தான். இதனை பணத்தால் மாற்ற முடியும்.

    ஆனால், தீண்டாமையும் சாதியும் பிறப்பின் அடிப்படையில் செயற்கையாகக் கட்டமைக்கப்பட்டது. இதனை ஒருவன் தனது சொந்த முயற்சியால் மாற்ற வழி உண்டா? சொல்லுங்கள் புரட்சி மணி 

    இந்தக் கொடுமையை இந்து மதம் கட்டிக்காப்பாற்றுகிறது. 
    Reply
    Replies
    1. வாங்க அருள் :)
      //ஒருவருக்கு காது கேட்கவில்லை, அல்லது கண்பார்வை இல்லை என்பது இயற்கையான குறைபாடு. இதனை மாற்ற முடியாது.//
      மருத்துவத்தினால் இதை மாற்ற முடியும்.அதை விடுங்கள். குறைபாடை குறைபாடாக பார்பதுதான் தவறு. தவறு நம் மனதில் தான் உள்ளது. 
      இதை கண்டிப்பாக மாற்ற முடியும். 
      //ஆனால், தீண்டாமையும் சாதியும் பிறப்பின் அடிப்படையில் செயற்கையாகக் கட்டமைக்கப்பட்டது. இதனை ஒருவன் தனது சொந்த முயற்சியால் மாற்ற வழி உண்டா? சொல்லுங்கள் புரட்சி மணி //

      சொந்த முயற்சியாளும் மாற்ற முடியும் கூட்டு முயற்சியாலும் மாற்ற முடியும்.
      ஆனால் நிச்சயமாக மாற்ற முடியும். செயற்கையாக கட்டமைக்கப்பட்ட ஒன்றை செயற்கையாக ஒழிப்பது சாத்தியமே. அதுபோல் ஜாதியை கண்டிப்பாக ஒழிக்க முடியும். சற்று காலம் ஆகலாம். இதுபற்றி வரும் பதிவில் அலசுவோம் தொடர்ந்து உங்களது கருத்தை கூறுங்கள்.
      //இந்தக் கொடுமையை இந்து மதம் கட்டிக்காப்பாற்றுகிறது.//
      உங்கள் கண்ணுக்கு இந்து மதம் மட்டுமே தெரிகிறது....பார்வையை விசாலாமாக்குங்கள் எல்லா மதங்களிலும், எல்லா நாடுகளிலும் இது உண்டு. 
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)
  5. நாய் இல்லாத வீட்டில் நரி அம்பலம் பண்ணிச்சாம் எலே வேகநரி நீ வேகநரியா இல்ல வேதநரியா தெரியாது ஆனா நான் கறுத்தபாண்டி என் அப்பன் பேரு சுடலை யார்லே வாந்தி எடுத்தது நானா அரபியன் நீவேனும்னா ஆரியனா இர்ருகலாம் /அருமையான கருத்துக்கள் நண்பரே. பார்ப்பன எதிர்ப்பு என்ற காலியாகிப்போன சட்டியை வைத்து பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்களின் ஏச்சுக்களை புறந்தள்ளுங்கள்.// இன்றும் பார்பானை தவிர இந்து கோவிலுக்குள் ஒருத்தனும் மணி ஆட்டமுடியாது என்று சுப்ரீம் கோர்ட் வரை போய்உத்தரவு வாங்கி வைத்திருப்பது யாரு ? சங்கராச்சாரி லே நாணலே பிச்சைகாரன் நான் விவசாய் லே என் இனத்தின் ஒரு பகுதி யான ஈழத்தமிழ் நண்பர்களே உங்களுக்காக நாங்கள் பள்ளனும் பறையனும் மற்றும் உள்ள தமிழ் சாதிகளும் தான் நீங்கள் சாகும் போது கத்தினோம் கதறினோம் நாங்களும் இந்தியனுக்கு அடிமை என்பதால் ஒன்றும் செய்யமுடியாமல் தீ குளித்து செத்தோம் இது எங்களுக்கு புதிது அல்ல நாங்கள் மூவாயிரம் ஆண்டுகளாக இப்படி தான் இருக்கிறோம் ஆனாலும் போராடுவோம் ஏன் என்றால் நாங்களும் மனிதர்கள் தான்
    ReplyDelete
    Replies
    1. //இன்றும் பார்பானை தவிர இந்து கோவிலுக்குள் ஒருத்தனும் மணி ஆட்டமுடியாது என்று சுப்ரீம் கோர்ட் வரை போய்உத்தரவு வாங்கி வைத்திருப்பது யாரு ?//

      எனக்கு தெரிந்து பல கிராமத்து கோயில்களில் பூசாரிகள் என்பவர்கள் பிராமணர்கள் அல்ல.மேலும் கருவறைக்குள் பிராமணர்களைத்தவிர 
      பிற ஜாதியினருக்கு அனுமதியில்லை என்பதும் தவறான வாதம்.பல கோயில்களில் பிராமணர் அல்லாதோரும் செல்கின்றனர்.
      ஆனால் சில கோயில்களில்(வருமானம் அதிகம் வரும் கோயில்களில், பெரிய கோயில்களில்,கூட்டம் அதிகம் வரும் கோயில்களில்) நீங்கள் கூறும் நிலைமை உண்டு என்பதை ஏற்கிறேன். 

      உச்ச நீதிமன்றம் எதன் அடிப்படையில் இந்த உத்தரவை தந்தது என்பது எனக்கு பெரிய கேள்வியாக உள்ளது. இந்த உத்தரவை கண்டிப்பாக நீக்கியே ஆக வேண்டும். எந்த ஜாதியானாலும் விருப்பம் உள்ளவனுக்கு, உரிய தகுதியை ஏற்ப்படுத்தி வாய்ப்பு தரவேண்டும்.
      karutha,தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)
  6. அய்யா ! குறிபிட்ட மக்கள் கூட்டம் எதுவும் இன்னொரு மக்கள் கூட்டத்திற்குஎதிரானது அல்ல........ அது மற்ற கூட்டத்துடன் எவ்வாறு உறவாடுகிறது என்பதை பொறுத்தே அதை பற்றி மதிப்பிட முடியும் பார்பனியம் என்ற த்த்துவம் தான் மக்களுக்கு எதிர் ஆன ஆதிக்க த்த்துவம் ஆகும் அதை நியாய படுத்துவது வேதம் மனுஸ்மிர்தி புராணங்கள் ஆகும் இதன் அடிபடையில் ஆனதே இந்து மதம் இதனை தலைமை ஏற்று நடத்துபவனே அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் இன்றும் நாம் போராடி சில உரிமைகளை பெற முயன்றாலும் அதை தடுப்பது யார் என்று யோசியுங்கள்! மேலும் கிராமகோயில் என்பது பூர்வகுடி மக்களின் வழிபாட்டு முறையாகும் அது எந்த விதத்திலும் இந்து மதத்துடன் தொடர்பு உடையது அல்ல அவைகள் சுதந்திரமானவை சுயட்சை ஆனவை முதலில் அதனை பேய் கோயில்கள் என்று கீழ்மை படுத்திய பார்ப்பனீயம் இன்று அதனையும் தன்னுடைய ஆளுமையின் கீழ் கொண்டு வர முயற்சி செய்து வெற்றியும் பெற்று வருகிறது மேலும் மக்களின் வழிபாடு முறைகள் எந்த விதத்திலும் ஆதிக்க நோக்கம் கொண்டது அல்ல ஆனால் ஆதிக்கமதங்கள் ஆன பெரு மதங்கள் தான் இயல்பான மக்கள் வழிபாடுகளை இஸ்லாம் காபிர்கள் என்றும் கிறிஸ்துவம் சாத்தான்கள் என்றும் இந்துமதம் பேய் கோயில்கள் என்றும் கொச்சை படுத்துகின்றன என்னை பொறுத்த வரை அமைப்பாகக பட்ட எந்த மதமும் மக்களுக்கு எதிர் ஆனதே
    ReplyDelete
//என்னை பொறுத்த வரை அமைப்பாகக பட்ட எந்த மதமும் மக்களுக்கு எதிர் ஆனதே//
இதை நான் வழிமொழிகிறேன் :) 

No comments:

Post a Comment